இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வரும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையும் இனிப்புகளையும் எடுத்துக் கொள்ளும்போது அதன் விளைவாக சர்க்கரைநோய் பாதிக்கும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிடும் வழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை… குறைந்தபட்சம் நீங்கள் உண்ணும் உணவுகளின் கலோரிகளை எரிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

தினமும் செல்வது, ஈரோபிக்ஸ் போன்ற ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது போன்றவை மிக முக்கியம். மன உறுதி இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியும். முயற்சி செய்யுங்கள். நீரிழிவு வந்துவிட்டால் உங்களால் எப்போதுமே இனிப்பு சாப்பிட முடியாது. எனவே அது வருவதற்கு முன்பே இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டால், எப்போதாவது ஆசைப்படும்போது சாப்பிட முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.