ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்து நடைபெறவுள்ள 9 போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்று டெல்லி அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி அனைத்திலும் தோல்வியடைந்து பாய்ண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்றவர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காயம் காரணமாக ரிஷப் பந்த் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் வந்த கேப்டன் பொறுப்பு டேவிட்வார்னருக்கு அளிக்கப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பலன்கள் அணிக்கு கிடைக்கவில்லை.

தொடர் தோல்வி குறித்து டெல்லி அணியின் இயக்குனரான சவுரவ் கங்குலி- இதை விட மோசமான நிலைக்கு நாங்கள் செல்ல முடியாது. அந்த அளவுக்கு தோல்வியை நாங்கள் சந்தித்து விட்டோம். இதிலிருந்து வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சிக்கிறோம். அந்த வகையில் அணியில் உள்ள வீரர்கள், கேப்டனுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறோம். அடுத்த ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் புதிய யுக்தியுடன் களத்தில் இறங்குவார்கள். இன்று 9 ஆட்டங்கள் மீதம் உள்ளன. அவை அனைத்திலும் டெல்லி அணி வெற்றி பெறும்.

திறமை மிக்க வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். வெற்றிப் பாதைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே தேவைப்படலாம். அதற்காக காத்திருக்கிறோம். டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் சிறப்பாக செயல்படுகிறார். அணியில் அவர்தான் முக்கியமான நபர். அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோன்று அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசினார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link