மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.

23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்தார். தந்தையைப் போலவே பேட்ஸ்மேனாக உருவாகாமல் வேகப்பந்து வீச்சாளராக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார் அர்ஜுன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி கவனம் பெற்றார். மேலும், சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டுக்காக மும்பை அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வாங்கியது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் அறிமுகமானார். அவருக்கு தொப்பியை, ரோஹித் சர்மா வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார் அர்ஜுன். சக அணிகளும் அர்ஜுனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வீரர்.

இந்தப் போட்டியை சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் மைதானத்தில் கண்டுகளித்தனர். இந்தப் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்திலும் சச்சின் பகிர்ந்துள்ளார்.

அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜுனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வாழ்த்தி வருகின்றனர்.





Source link