கயிறு மூலமாக கடற்பாசி வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 2022-23ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கயிறு மூலமாக கடற்பாசி வளர்ப்பு மற்றும் உள்ளீட்டுக்கு மானியம் வழங்குவதற்கான திட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1 பயனாளிக்கு 2 அலகு வீதம் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின்படி 1 அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.8000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4800 பயனாளியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே தஞ்சாவூர் மாவட்டமானது கடற்பாசி வளர்ப்பிற்கு உகந்த பகுதியாக அமைந்துள்ளது. 9952226545, 7339349630 ) நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link