மாஸ்கோ: சீனா – ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பூ ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல்கட்டமாக தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பின் முடிவில் புதின் பேசும்போது, ​​“பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சமூகம் சார்ந்து சீனா – ரஷ்ய நாடுகளிடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. முழு உலகத்தின் நலன்களுக்கான இரு நாடுகளும் தொடரும் “என்று தெரிவித்தார்.

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர சீனா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன் பொருட்டே கடந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் சீனாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் விரைவோல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்று ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது லி ஷாங்பூ ரஷ்யா வந்துள்ளார்.

முன்னதாக ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாக சீனா உதவுகிறது என்று உக்ரைன் குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் இதற்கு ரஷ்யா தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

ரஷ்யா – உக்ரைன் போர்: நெட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு, அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link