இந்திய பெண்கள் பலர் கல்வியிலும் விளையாட்டிலும் நாளை உலக அரங்கில் ஜொலிப்பார்கள் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளருமான நீடா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும், அதைவிட மகிழ்ச்சி ததும்பும் நிகழ்வு ஒன்றும் அரங்கேறியது. வான்கடே மைதானத்திற்குள் இதுவரை சென்றிடாத 19,000 சிறுமிகளை, முதல் முறையாக அழைத்து வந்து கிரிக்கெட் போட்டியை காண வைத்தனர்.

இதற்கான ஏற்பாட்டை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீடா அம்பானி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பிரீத், பயிற்சியாளர் ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் சிறுமிகளுடன் போட்டியை கண்டுகளித்து ஊக்கப்படுத்தினர்.

தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக 19 ஆயிரம் சிறுமிகளை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க ஒருங்கிணைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஹெட்மையர் அதிரடி அரைச்சதம்… கடைசி ஓவரில் குஜராத்தை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பலருக்கும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு முதல் முறையாக கிடைத்துள்ளதாக கூறியுள்ள அவர், பெண்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு முழு உரிமை உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். தொலைக்காட்சியை பார்த்து கனவுகளை வளர்த்துக் கொண்டவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மைதானத்திற்கு அழைத்து வந்ததாகவும், இவர்களில் உலக அரங்கில் நாட்டுக்காக சாதனைகளை குவித்து பாராட்டு பெறுவார்கள் என்றும் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link