தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு என எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய நடிகர் என்றவுடன் ரசிகர்களின் நினைவுக்கு வரும் பெயர்களில் முக்கியமான ஒன்று விக்ரம். 1990ஆம் ஆண்டு டி.எல்.ஜோய் இயக்கத்தில் வெளியான ‘என் காதல் கண்மணி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் விக்ரம். அதன் பிறகு முன்னணி இயக்குநரான எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’ படத்தில் நடித்தார்.

அடுத்ததாகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ படத்தில் நடித்தார். அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், எந்தப் படங்களும் விக்ரமுக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. தோல்வி நாயகனாகவே திரையுலகில் அறியப்பட்டார்.

விக்ரம் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

இதையும் படிங்க : சம்பவம் இருக்கு..! மிரட்டும் தங்கலான் மேக்கிங் வீடியோ.. விக்ரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெற்றிக்காக போராடிய நடிகர் விக்ரமிற்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகே சேது படத்தின் மூலம் வெற்றி கிடைத்தது. ஆனால் அதன் பின் அவரின் வளர்ச்சி அபிரிமிதமானது. யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தை அவர் தமிழ் சினிமாவில் அடைந்து விட்டார் எனலாம்.

விக்ரமின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் சூழலில் நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் உள்ள விக்ரம் ரசிகர் மன்றம் சார்பாக, வேலகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோருடன் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிறந்தநாள் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டமாகவே இருந்துவிடாமல் ஏழைகளுக்கு பயனுள்ள வகையில் கொண்டாட்டத்தை மாற்றிய விக்ரம் ரசிகர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link