தற்போதைய வழக்கில் இதனைச் சுட்டிக்காட்டிய இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ‘இவ்வழக்கின் பேச்சுப் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. திருமண வயது குறித்த சட்டம் நீக்கப்படுமானால், நாட்டின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதே இல்லாமல் போய்விடும்’ என்றார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான திருமண வயது பரிந்துரைக்கப்படுவதில், சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை இவ்வழக்கில் கேட்கப்படும்.
இதற்கு முன்பே அஷ்வினிகுமார் உபாத்யாய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை முன் வைத்து, இவ்வழக்கும் தள்ளுபடி செய்யப்படுவதாக, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே.பி. பர்டிவாலா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
– நிலவுமொழி செந்தாமரை