சிவம் துபே மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அவர் தன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என சென்னை அணி கேப்டன் தோனி அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக ஆடி 226 ரன்களை குவித்தனர். ருதுராஜ் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்யா ரஹானேவுடன் இணைந்த டெவோன் கான்வே அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஹானே37 ரன்களில் வெளியேற, அரைசதம் கடந்த கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே 27 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 52 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களை மிரள வைத்தார். இந்த நிலையில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு சிவம் துபே பற்றி பேசிய சென்னை அணி கேப்டன் தோனி பெங்களூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. போட்டியின் துவக்கத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் பொருத்தமானதாக இல்லை.

இதையும் படிங்க: IPL 2023 : ஐ.பி.எல் டிக்கெட் ஆன்லைனில் பதுக்கல்..? கொந்தளிக்கும் ரசிகர்கள்

சிவம் துபே கஷ்டமான ஷாட்களை கூட இலகுவாக அடிக்ககூடிய திறன் வாய்ந்தவர். அவருக்காக நாங்கள் சில திட்டங்களை வைத்துள்ளோம். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிவம் துபேவிடம் சில பிரச்சனைகள் உள்ளன, ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களை அவரால் எளிதாக எதிர்கொள்ள முடியும். அவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அவர் தன் மீதான தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என தோனி அறிவுறுத்தியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link