1824 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சலீவன் அவர்களால் வெளி உலகிற்கு பிரபலமடைந்தார். நீலகிரி மாவட்டம் தற்போது 199 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் உதகையில் உள்ள சில பழங்கால கட்டிடங்கள் மற்றும் முக்கிய பாரம்பரிய சுற்றுலா தளங்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை 16.4.2023 முதல் 28.5.2023 வரை உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மரபு வழி நடைபயணம் அழைத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயணம் ஆனது உதகை அரசு கலைக்கல்லூரி ஆதாம் நீரூற்று அசெம்பிளி திரையரங்கம் பிரிட்ஜ் பள்ளி நீலகிரி லைப்ரரி மாவட்ட நீதிமன்றம் ஸ்டீபன் தேவாலயம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மரபு வழி நடைப்பயணத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சுற்றுலா அலுவலகம் உதகமண்டலத்தை தொடர்பு கொண்டு தங்களின் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அலுவலர் திரு உமாசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link