சுட்டெரிக்கும் வெயிலில் கை குழந்தையுடன் வந்த கர்ப்பிணிக்கு மனிதநேயத்துடன் உதவி காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகாவை நேரில் அழைத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் இருந்து கர்ப்பிணி ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையுடன் கடும் வெயிலில் பெரும் சிரமத்துடன் நடந்து வந்தார்.

ஆனால், வெயில் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது ஆனால் வயிற்றில் மற்றொரு குழந்தையின் கையில் லக்கேஜ் பேக் என ஏற்கனவே சுமையோடு வந்த அந்த பெண் குழந்தையை தூக்க முடியவில்லை. இந்த பெண்ணுக்கு உதவ முன் வந்தார் காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா.அதாவது கர்ப்பிணியின் நிலையை உணர்ந்து ஓடிச் சென்றார். அதன்படி அந்த பெண்ணின் குழந்தையை தூக்கி தோளில் சுமந்தார்.பின்னர் சுமார் 300 மீட்டர் தூரம் சுவாதிகா குழந்தையை தோளில் தூக்கி சுமந்தபடி முதலாவது நடைமேடைக்கு வந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

அதற்குள் அந்த கர்ப்பிணியின் உறவினர் வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார்.கர்ப்பிணி மற்றும் அவரது உறவினர்கள் காவலருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,சுட்டெரிக்கும் வெயிலில் கை குழந்தையுடன் வந்த கர்ப்பிணிக்கு மனிதநேயத்துடன் உதவி காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகாவை நேரில் அழைத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் வெகுமதி வழங்கினார்.

காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.கடந்து 2021 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார் கடந்த ஆறுமாதமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பயிற்சி முடித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link