காஞ்சிபுரத்தில் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலஅளவை களப்பணியாளர்களின் பல்வேறுபட்ட பணிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் இயக்குனர் வரையிலான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஊழியர் விரோதப் போக்கை மேற்கொள்வதாக குற்றம் சாட்டி, அதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நில அளவை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா கண்டன உரையாற்றினார்.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திடும் களப்பணியாளர்களின் ஓட்டு மொத்தப் பணியினையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்.

கடுமையான பணி சுமையுடன் வேலை பார்க்கும் நில அளவாளர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட் அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link