தமிழ்ச் சங்கமம் முயற்சி… பாஜக-வின் வியூகம் வெல்லுமா?!

‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி

“தமிழ்நாட்டில் நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ் மாநாட்டை ரயில் டிக்கெட் புக் செய்து காசியில் கொண்டுபோய் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எங்கேயெல்லாம் பாரம்பரியம் விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதைக் கையிலெடுத்து அதன் மூலமாக தன் இயக்கத்தை அடையாளப்படுத்த நினைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.

இந்த நிலையில், இப்போது மத்திய அரசு, குஜராத் அரசு இணைந்து `சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் தொடக்க விழா

தமிழ்ச் சங்கமம் ஊடாக தமிழகத்தில் சங்கமிக்க முயலும் பாஜக-வின் இந்த வியூகம் வெல்லுமா..?

விரிவான அலசலைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

“அந்த 1,023 கோடி ரூபாய் சொத்தை…” – அண்ணாமலையை விளாசிய அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக-வை குறிவைத்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ‘DMK Files’ தொடர்பாக இருதரப்பும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இது தொடர்பாக அண்ணாமலையை விளாசி எடுத்தார்.

அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

‘கடற்கரையில் மீன் விற்கக் கூடாது…’ – நீதிமன்றத்துக்கு சீமான் ஆவேச கேள்வி!

சீமான்

சென்னை, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் வரையுள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மீனவ மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது நீதிமன்றத்துக்கு ஆவேச கேள்வி எழுப்பினார்.

சீமான் பேட்டியைப் பற்றி முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

‘பதவி விலகல்…’ – ஆளுநர் ஆர்.என். ரவி பதில்!

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர்

ன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது தொடர்பாக திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்தன.

இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது தனது பதவி விலகல் தொடர்பாக அவர் அளித்த பதில் உள்ளிட்டது விரிவான கலந்துரையாடலைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

மேலும்,

“சித்த மருத்துவ மசோதாவைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்”

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

வேலை இழப்பு… இளைஞர்கள் செய்ய வேண்டியவை என்ன?

இளைஞர்கள் செய்ய வேண்டியவை…

மீப காலமாக பெரும் நிறுவனங்களின் பணி நீக்கங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த வேலைநீக்கம் பல தனிநபர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும், பொருளாதார மந்தநிலையைஎதிர்த்துப் போராடி முன்னேறுவதற்கு இளைஞர்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.

அந்த விஷயங்களைப் பற்றி விளக்குகிறார் FundsIndia சி.ஐ.ஓ கிரிராஜன்முருகன்…

படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

‘கோடைக்காலத்தில் மது… மருத்துவர் அலர்ட்!

மது

மீபத்தில், சென்னை தேனாம்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடைக்கால வெப்பத்தால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘கோடைக்காலத்தில் மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்’ என்று அறிவுறுத்தினார்.

கோடைகாலத்தில் மது அருந்துவதால் அதிக பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் அளிக்கும் விளக்கத்தை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்…

2023 குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்!

குருப்பெயர்ச்சி பலன்கள்!

துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன் ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த, 12 ராசிகளுக்கு முழுமையான குருப்பெயர்ச்சி ராசி பலன்கள் இன்று வெளியான சக்தி விகடன் இதழில் இடம்பெற்றுள்ளது.

படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

“சிரஞ்சீவி, தனுஷ்தான் என்னை பார்த்துக்கிட்டாங்க…” – பொன்னம்பலம்

பொன்னம்பலம்

கிடினி பாதிப்பு உட்பட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

இடைப்பட்ட நாட்களில் சந்தித்த பொருளாதார ரீதியான சிரமங்கள், எதிர்பார்த்தவர்கள் உதவாமல் போனது, எதிர்பாராமல் உதவிய நடிகர்கள்… என மனம் திறக்கிறார் பொன்னம்பலம்…

அவரது விரிவான பகிர்தலைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்…



Source link