தலைநகர் டில்லியில் சோழர்கள்

18 ஏப், 2023 – 10:47 IST

எழுத்தின் அளவு:


PS-2-டீம்-அட்-டெல்லி

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா துலிபலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, அஷ்வின் கக்கமனு, ரகுமான், கிஷோர் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் அவர்கள் ஆரம்பித்த ‘சோழர்களின் பயணம்’ என்ற புரமோஷன் பயணத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா, ஜெயராம் என பலரும் பட புரொமோஷனில் பங்கேற்று வருகின்றனர். முக்கியமான ஊர்களில் மணிரத்னம் பங்கேற்கிறார்.

இன்று(ஏப்., 18) டில்லியில் நடைபெறும் நிகழ்வில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர். விமானத்தின் பின்னணியில் இவர்கள் 6 பேரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.





Source link