மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு (மத்திய பணியாளர் தேர்வு – SSC) : எஸ்.எஸ்.சி.யின் 7,500 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வௌியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான 7,500 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பணியிடங்களுக்கான விவரம், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வு திட்டம் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆல்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

மேலும் ssc.nic.in/SSCFileserver/PortalManagement/uploadfiles/noticeCGLE030 42023.pdf என்ற இணையதள முகவரியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்விற்கு www.ssc.nic.in என்ற இணையத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 4-ந் தேதி கடைசி நாளாகும்.

தேர்வு ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 7 இடங்களில் நடக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தேர்வுக்கான பாடக்குறிப்புகள் Tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில் TN carrer services empolyment மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளிகளைப் பயன்படுத்தலாம். எனவே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link