விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி அரசன் கணேசன் கல்லூரியில், அரசுப் பள்ளிகளில் பிளஸ்-2-வில் சிறப்பாகப் படித்த 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ-மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேட்கப்படும் கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணுகும் முறைகள்எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

மேலும் பெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும், நீட் தேர்வில் வெற்றி பெறவும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற 4 மாணவர்கள் பற்றியும், அவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற விதம் குறித்தும் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link