ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்திற்கு சென்னை முன்னேறியுள்ளது. சென்னை அணி இதுவரை மோதிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் நெட் ரன் ரேட் +0,265 என வலுவாக இருக்கும் நிலையில் பாயின்ட்ஸ் டேபிளில் முன்னேற்றம் கண்டுள்ளது. நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சி.எஸ்.கே. பெங்களூரு அணியை 8 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 ரன்களை குவித்த நிலையில் அடுத்து விளையாடிய அணியால் 20 ஓவர்களில் 218 பெங்களூர் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணி தான் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியும், அடுத்த 2 போட்டிகளில் வெற்றியும் 4வது போட்டியில் தோல்வியும், பெங்களூருவுக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில் வெற்றி பெற்று தர வரிசையில் 3ஆம் இடத்திற்கு சென்றுள்ளது. முதலிடத்தில் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் +1.354 நெட் ரன்ரேட்டுடன் உள்ளது. அடுத்த இடத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி +0.761 நெட் ரன் ரேட்டுடன் 6 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

இதேபோன்று அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப் (தொப்பி)-யிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் 259 ரன்களை 5 மேட்ச்சுகளில் அடித்து ஆரஞ்ச் கேப்பை தன்வசம் வைத்துள்ளார்.இதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 234 ரன்களுடனும், ஷிகர் தவான் 233 ரன்களுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link