திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் வசிப்பவர் சோலை. இவரது தாத்தா, அப்பா மற்றும் சோலை என மூன்று தலைமுறைகளாக வாத்து வளர்ப்பில் இவரது குடும்பம் ஈடுபட்டு வருகிறது. ஆடு, மாடு, கோழி என மற்ற கால்நடைகளைப் போல வாத்து வளர்ப்பிலும் லாபம் பார்க்க முடியும் என்கிறார் சோலை. பிராய்லர் கோழிக்கு பதிலாக வாத்து இறைச்சியை மக்கள் தற்போது உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது வாத்து வளர்ப்பு என்பது லாபகரமான ஒன்றாக இருக்கிறது. வாத்து வளர்ப்பு முறைகள், உணவு, அவற்றைத் தாக்கும் நோய்கள் ஆகியவை குறித்து நம்மிடம் விளக்குகிறார் விவசாயி சோலை, “பொதுவாக நெல் அறுவடை முடிந்த வயல்வெளிகளில் வாத்துகளை மேய விடலாம். வாத்துக்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இருக்காது.
ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். காலை 7 மணிக்கு வயல்ல இறங்கி பொழுது சாயற வரைக்கும் அவசிய மேய்த்து மாலை வேளையில் ஓட்டிட்டு வந்து கொட்டில் அடைக்க வேண்டியதுதான். இதற்கு 2 ஆட்கள் போதும். நாம் இருக்கும் இடத்தைத் தேடி வந்து முட்டைகளையும் வாத்துகளையும் வியாபாரிகள் வாங்குகிறாங்க.
வாத்துகளுக்கு கொட்டகை பெரிய அளவில் தேவைப்படாது. நல்ல காற்றோட்டத்துடன், எலி தொல்லைகள் இன்றி இருத்தல் வேண்டும். கூரை கூடாரமாகவோ, அரை வட்டமாகவோ இருக்கலாம். தரை சாதாரணமாகவோ உலோகக் கம்பிகளாலோ அமைக்கப்பட்டிருக்கலாம்.மெய்ச்சலுக்கு போற இடத்திலே கம்பி வலையில் பட்டி போட வேண்டும்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
வெயில் நேரத்துல தண்ணி நிறைய இருக்கிற மாதிரி இடத்துல போய் விடணும். ஆடி, சித்திரை மாதங்களில் மெய்ச்சலுக்கு வயல் கிடைக்காது. அந்த மாதிரி சமயத்தில் பட்டிக்குள்ள வச்சுத்தான் தீவனம் கொடுக்கவேண்டியதிருக்கும். விலை கம்மியா கிடைக்கும் ஏதாவது தானியங்களைத் தீவனமாகக் கொடுக்கலாம். வாத்துக்கள் நாலரை மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பருவத்துக்கு வந்து முட்டையிட ஆரம்பிக்கும்.
வாத்துகள் எப்போதும் நீருடன் சேர்ந்துதான் உணவருந்தும். முதல் 8 வாரங்களுக்கு நாள் முழுவதும் உணவருந்த வேண்டும். பின்பு நாளொன்றுக்கு இருமுறை அதாவது காலை முதல் பிற்பகலிலும் அளிக்கலாம்.
பிற பறவைகளை விட வாத்துகள் பொதுவாக கடின உடலமைப்பைப் பெற்றவை. வாத்துகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாத்து பிளேக், பூசண நச்சு நோய் மற்றும் பாஸ்டுரெல்லா நொண்டி நோய் போன்றவை. இவைகளைத் தடுக்க முக்கியமான வழி பூஞ்சான் தாக்கிய தீவனங்களை வாத்துகளுக்கு அளிக்காமல் இருப்பதே ஆகும். வாத்து பிலேக்கிற்கு தற்போது தடுப்பூசிகள் உள்ளன. இது 8-12 வார வயதில் இத்தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். இந்த முறைகளில் பராமரித்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்” என்று கூறி வாத்துக்கு நீர் மாறி கிளம்பிவிட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: