முன்னரே அவர்கள் போட்டுவைத்திருந்த திட்டத்தின்படி, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா ஆகியோர் மீது மிளகாய்பொடியை தூவிவிட்டு சிறைக்கைதிகளை இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்டு காவலர்கள், மர்மகும்பலை துப்பாக்கியை காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறைக்கைதிகளை தனியே ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, கைதிகளை வெட்டிவந்த மர்ம கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என மிரட்டி சுடுவதற்கு ஆயத்தமானதும் கொலைசெய்ய வந்தவர்கள் பயந்து அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் காயமுற்ற இரு கைதிகளுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளை மருத்துவமனைக்குள் புகுந்து வெட்ட முயன்ற மர்மகும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிழக்கு காவல்நிலைய போலீசார், கொலை முயற்சி செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தியதில் திண்டுக்கல்லில் கொலைசெய்யப்பட்ட சின்னதம்பியின் உறவினர்களான விஜி, நட்டுராயன், ஒலிசை குமார், குணம், பரமசிவம் ஆகிய 5 பேர் என தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.