சென்னையில் 4மாடி கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பாரிமுனையில் அரண்மனை 4வது தெருவில் 4 மாடி கட்டடம் ஒன்று புதுப்பித்தல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

கட்டட இடிபாடுகள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: சென்னை, தமிழ் செய்திகள்



Source link