திருமலை: ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் ஆன்லைன் டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை (ஏப்.20) வெளியிட உள்ளது.

அதன்படி காலை 10 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் முறை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன. இதில் 22-ம் தேதி வரை காலை 10 மணி வரை பக்தர்கள் பங்கேற்கலாம். இதையடுத்து ஜூலை மாதத்தில் திருக்கல்யாணம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைபோன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் அதே நாளில் காலை 11.30 மணிக்கு ஆன்லைனில் வெளியாகின்றன.

Source link