சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்,அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம், அரசு சித்தமருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு,அறிவுரையின் படி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரமா,சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் இராஜரத்தினம் சைபர் கிரைம் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

அப்போது பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கிக் கணக்குகளின் இரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், முகாந்திரம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை வாங்கும் போது கவனத்துடன் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாகவும் எந்த ஒரு அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள், இணைப்புகளுக்கும் பதில் அனுப்ப வேண்டாம் என்றும் கூறினார்.

மேலும், சைபர் கிரைம் குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண் 1930 மோசடி புகார்களுக்கு புகார் செய்ய வேண்டிய இணையதள முகவரி (http://cybercrime.gov.in) வழங்கப்படும், பெருகி வரும் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துக்கூறவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், காவலன் உதவி செயலி குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link