நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007-ம் ஆண்டு திருமணம் நடந்து 2011-ம் ஆண்டு இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது 12 வயதாகும் ஆராத்யா பச்சன் தனது பெற்றோருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதில் அவரின் நடை, பாவனை ஆகியவற்றைப் பார்த்து பல யூடியூப் சேனல்கள் ஆராத்யா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என வதந்தி பரப்பி வந்தார்.

சமீபத்தில் தன் மகள் பற்றி பேசிய அபிஷேக் பச்சன், “நான் நன்கு பரிச்சயமான நபர். அதனால் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என் மகள் அதற்கு அப்பாற்பட்டவர். அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்துக்கு நேராக வந்து சொல்ல வேண்டும்” என மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில், தன்னைப் பற்றி வதந்தி பரப்பிய 10 யூடியூப் சேனல்கள் மீது, ஆராத்யா பச்சனும் அவர் அப்பாவும் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தன்னை பற்றிய வீடியோக்களை நீக்க வேண்டும் மற்றும் அந்த சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தக்க தண்டனை தரவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஆராத்யா. இந்த மனுவை ஆராத்யாவின் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் ஆகிய இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.