வெப்பம் அதிகமாக காணப்படும் விருதுநகரை,சோலை வனமாக்கும் நோக்கில்பொதுமக்களை அணி திரட்டி வார வாரம் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஆலமரம் புஷ்பராஜ்.

தமிழ்நாட்டின் உஷ்ண பிரதேசமாக விளங்கும் விருதுநகரில் சாதரண நாட்களிலேயே வெப்பநிலை அதிகமாக தான் இருக்கும். ‘என்னா வெயில் அடிக்குது இந்த ஊருல’ என்று இங்கு வந்த வெளியூர் மக்கள் புலம்புவதை பார்க்க முடியும். அப்படி விருதுநகருக்கு தொழில் நிமித்தமாக வந்த புஷ்பராஜ், இந்த ஊரின் வெப்பத்தை குறைக்க அருகில் இருக்கும் பகுதியில் மரங்களை நட்டு அவற்றை பராமரித்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

ஆலமரம் அமைப்பு:

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகரை சோலைவனமாக்கும் முயற்சியில் மக்களின் பங்களிப்பு இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து கொண்ட புஷ்பராஜ் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை இணைத்து ஆலமரம் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொருவாரமும் விருதுநகர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு இதுவரை 2000க்கும் அதிகமான மரக்கன்றுகள் மற்றும் 500 பனை விதைகளை நட்டு வைத்துள்ளனர்.

இது பற்றி பேசிய விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், ஆலமரம் என்ற பெயருக்கு ஏற்றது போல் விருதுநகரின் பசுமை பணியில் ஆலமரம் அமைப்பினரின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்று என்று தெரிவித்தார். இதே போல் வரலோட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி பேசும் போது, ஆலமரம் புஷ்பராஜ் மற்றும் ஆலமரம் அமைப்பின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு தானும் அந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதாக கூறினார்.

ஞாயிறு வேலைநாள்:

200க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பினருக்கு ஞாயிற்றுக்கிழமை தான் வேலை நாள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இடங்களை தேர்வு செய்து தவறாது மரங்களை நடும் பணியை செய்து வருகின்றனர்ஆலமரம்அமைப்பினர்.

ஆலமரம் புஷ்பராஜ்

இவ்வமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் பேசும் போது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை பொழுதை இதற்காகவே செலவிட்டு வருவதாகவும், ஒவ்வொரு வாரமும் ஆலமரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தான் அனைவரையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அனைவரும் கூறுவதை வைத்து பார்க்கும் போது, விருதுநகரின் பசுமை பணியில் ஈடுபட்டு வரும் ஆலமரம் புஷ்பராஜ் அவர் விதைத்த விதை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இது பற்றி பேசிய புஷ்பராஜ் முதலில் இயற்கை பாதுகாப்பிற்காக தான் இதை செய்ய தொடங்கியதாகவும், நாளடைவில் இந்த அமைப்பில் உள்ள இளைஞர்களின் முனைப்பே தன்னை ஒவ்வொரு வாரமும் ஓய்வெடுக்க விடாமல் ஓட வைப்பதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link