திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சி மற்றும் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி பகுதிகளான எழில்நகர், மேலகுமாரேசபுரம், கிழக்குமரேசபுரம், கணேசபுரம், ஜெய் நகர், திருவேங்கட நகர், பெல்பூர் ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள வீடுகளில் இருந்து தினசரி பெறப்படும் கழிவுகளான மக்கள் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் பேரூராட்சி வாகனம் மற்றும் ஊராட்சி வாகனங்கள் கொண்டு வந்து திருவெறும்பூரில் இருந்து எழில் நகர் வரை செல்லக்கூடிய பிரதான சாலைகள் இருபுறங்களிலும் கொட்டப்படுகின்றன.

இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவர்கள் மூக்கை பிடித்துச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. மேலும் இப்பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தேங்கி கிடக்கும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் அங்குள்ள மரங்கள் எரிவதால் சாலைகளில் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. அந்த புகை சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவுவதால் மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இதையும் படிங்க : 10 ரூபாய்க்கு சுவையான மீன்குழம்பு சாப்பாடு ரெடி.. புதுச்சேரியில் ஃபேமஸ் ஆகும் ஹோட்டல்..

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

மேலும், இந்த சாலையை ஒட்டி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுகள் பாசன வாய்க்காலின் விழுவதால் பாசனவாய் காலில் தண்ணீர் மாசுபடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளை உண்ணுவதற்கு ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகள் வந்து உண்பதால் குப்பைகளில் உள்ள பாலிதீன்களை கால்நடைகள் உண்பதால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்காக சாலை மறியல் செய்ததாகவும், அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குப்பைகளை அகற்றி விடுவதாக கூறிச்சென்றுள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள் மெத்தன போக்காக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு அமைச்சர் தொகுதி மக்களுக்கே இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதால் இதுகுறித்து அரசு, அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link