உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு(ஏப்ரல் 18) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் நினைவிடங்களுக்கு ஒரு நாள் மரபு பயணம் செல்ல உள்ளதாக முன்னதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், “உலக பரம்பரிய தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு நாள் பாரம்பரிய மரபு அழைத்து செல்லப்படும் என்றும் இதற்கு ஒரு நபருக்கு 300 ரூபாய் கட்டணம் என்றும் அதில் மதிய உணவும் சேர்த்து வழங்கப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் ஒரு நாள் மரபு பயணம்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி ஏப்ரல் 18ம் தேதியன்று காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புறப்பட தயாராக இருந்த பேருந்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், இந்த பயணத்தில் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மூவரை வென்றான், திருமலை நாயக்கர் அரண்மனை, குத்துக்கல் போன்ற தொல்லியல் நினைவிடங்கள் பொதுமக்களுக்கு காட்சியளிக்கும் நிலையில், பேருந்து மீண்டும் மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: