நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள அன்னபூர்ணா பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் நன்னிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி தோழியுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.மத்திய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்று உள்ளார். தொடர்ந்து அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக சென்று பார்த்த போது அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனையடுத்து நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவாரூர்)

திருவாரூர்

திருவாரூர்

இதையும் படிக்க : இன்ஸ்டாவில் மாணவிக்கு ஆபாச புகைப்படங்கள்… ஆசைக்கு இணங்க மிரட்டல்.. வசமாய் சிக்கிய வாலிபன்..!

இந்த நிலையில் நாகப்பட்டிணம் மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் காதலன் சத்யராஜ் (வயது 26) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் விசாரணையில் சத்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக அர்ச்சனாவை காதலித்து வந்துள்ளார்.மேலும் சத்யராஜுக்கு உறவுக்கார பெண்ணுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக சத்யராஜ் அர்ச்சனா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு 45 நிமிடம் சத்யராஜுடன் அவர் செல்போனில் பேசினார்.அந்த உரையாடலில் சத்யராஜ் நீ தொலைந்து விடு என்று கூறியதாகவும், மேலும் வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அர்ச்சனா தொலைந்து போக சொல்லிவிட்டு பிறகு வீடியோ கால் எதற்கு என்றும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து வீடியோ கால் வந்த சத்யராஜ் அர்ச்சனா தூக்கு போடுவதை பார்த்து ரசித்துள்ளார். மேலும் தூக்கு மாட்டுவதற்கு முன்பு எனக்கு டாட்டா காட்டிவிட்டு மாட்டிக்கொள் என்று ஈவு இறக்கம் இல்லாமல் சத்யராஜ் கூறியதாக போலீசார் அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link