கோடைக்காலம் தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…மேலும் பல மாவட்டங்களில் பரவத் தொடங்கியுள்ளது.

வாட்டும் வெயில்:-

பொதுவாக வெயில் காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக அளவில் உடலளவில் பிரச்சனைகள் ஏற்படும் முக்கிய நீர்ச்சத்து குறைபாட்டை சொல்லலாம்… குளிர்காலத்தை விட வெயில் காலத்தில் தான் உணவுகள் எளிதில் கெட்டு போகும்… எனவே அதை உண்ணும் போது ஃபுட் பாஸ்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது… அதனால் உணவு பழக்கத்தில் வெயில் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். .. எனவே நீர் ஆதாரம் உள்ள இளநீர், தர்பூசணி, பழங்கள், போன்ற இயற்கையாக கிடைக்கும் பொருட்களை உண்பது முக்கியம்..

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்களை’ முழுவதும் தவிர்க்க வேண்டும்.. ஒரு சில தாய்மார்கள் இளநீர், பழங்களை கொடுப்பது இல்லை.. காரணம் இவையெல்லாம் காய்ச்சல் ஒத்துகாதோ…சளி வந்துவிடுமோ..என்று அச்சப்படுவார்கள். ஒன்றும் இல்லை.. தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்… ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்கலாம்… பலாப்பழத்தை தவிர்த்து மற்ற பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.. கடைகளில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய குளிர் பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க | 25 வருட இயற்கை விவசாயத்தால் கற்றுக்கொண்டது என்ன? – தஞ்சை விவசாயியின் அனுபவம்…

வெயிலில் விளையாட கூடாது:-

விடுமுறை நாட்களில் குழந்தைகள் கண்ட நேரத்தில் வெயிலில் அலைவதோ விளையாடுவதை தவிர்க்க வேண்டும் இது தோல் பிரச்சனை உடல் சோர்வு, போன்ற பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே 9 மணிக்கு மேல் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மாலையில் 5 மணி நேரத்தில் விளையாடலாம்.

மீண்டும் என்றால்:-

கடந்த பத்து நாட்களில் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது இது எப்படி இருக்க போகிறது என்பது தெரியவில்லை ஆனால் நாம் எப்போதும் போல சானிடைசர் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. இது அதிகமாக குறையுமா என்பது நம் கையில் தான் உள்ளது, வெளியில் சென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link