தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பாக நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆக்கபூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் வகையில், வருகின்ற மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை, இலவச நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

முகாமில், தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகள் அரசு சார்பில் நடைபெறும், அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் படிக்கவும் | நாமக்கல்லில் வரும் 25ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

ஜூன் 2023 மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும், வருடம் முழுவதும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் ஆண்டு சந்தா ரூ.200/- செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம். விடுமுறை நாட்களில் குழந்தைகள் பயனுள்ள வகையில் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களது மாணவ மாணவிகளின் பயிற்சியில் சேர்த்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை தொலைபேசி எண்கள் 94432 24921, 63829 18902 மூலம் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link