நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார, தோட்டக்கலைத் துறையில், 2023–24ஆம் ஆண்டு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, ​​வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, செல்லப்பம்பட்டி, பாச்சல், காரைக்குறிச்சிபுதூர் மற்றும் தாத்தையங்கார்பட்டி ஆகிய 4 கிராமங்கள் இந்த ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தோட்டக்கலைத்துறைக்கு, செல்லப்பம்பட்டி, பாச்சல் ஆகிய கிராமங்கள், வேளாண் துறை, காரைக்குறிச்சிபுதூர், தாத்தையங்கார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய் கிராமங்களில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யாத நிலம் மற்றும் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து, நிலங்களை சமன் செய்து, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, அந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்படும்.

இதையும் படிங்க | பள்ளி விடுமுறையை கழிக்க இலவச கோடைக்கால சிறப்பு பயிற்சி.. அசத்தும் நாமக்கல்!

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

மேலும், பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும், பெரியவர்களுக்கு, 75 சதவீதம் மானியத்திலும், துணை நீர் மேலான் திட்டத்தில், நீர் தொட்டி அமைத்தல், பைப் லைன் அமைத்தல் மற்றும் மின் மோட்டார் போன்ற இனங்களுக்கு, 50 சதவீதம் மனிதாபிமானத்தில், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி விரிவாக்கம், துள்ளியப் பண்ணையத் திட்டம் மற்றும் அங்கக வேளாண்மை போன்ற இனங்களில், 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் பழக்கன்றுகள் (ஒட்டுசெடிகள்), வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க | நாமக்கல்லில் வரும் 25ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்..

மேற்கண்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலைத் துறையை அணுகி பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கார்த்திக், ராமநாதன் மற்றும் புவித்ராவை, 9629656185, 78451 98881, 80560 67220 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெறலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link