மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில், தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகரான ரிஷி போபவாலா என்ற நபர், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள “மவுண்ட் ஜங்ரோஜோச்” என்ற சிகரத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியை எடுத்து சென்றார். இச்சிகரம், “Top of Europe” என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் உயரமான ரயில்நிலையம் இங்குதான் அமைந்துள்ளது. இவரின் இந்தச் செயலை இணையவாசிகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் மும்பை பக்கத்தில் பகிர்ந்து இந்த ரசிகரைப் பாராட்டி வாழ்த்தியுள்ளது.

ரஜத் படிதாருக்கு டி வில்லியர்ஸ் ஜெர்ஸி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டி வில்லியர்ஸ், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில், “உங்களுடைய எண்.17 என்ற எண்ணைக் கொண்ட ஜெர்சியை, வேறு யாருக்குக் கொடுப்பீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த டி வில்லியர்ஸ், “இது ஒரு கடினமான கேள்வி. ஒருவேளை, ரஜத் படிதாராக இருக்கலாம். வருங்காலத்தில் ஆர்சிபி அணிக்குப் பலமான நபராக இருப்பார். அந்த இளைஞனுக்கு என்னுடைய ஜெர்சியைக் கொடுக்க விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த 2023 ஐபிஎல் தொடரில், காயம் காரணமாக ரஜத் படிதார் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜத் படிதார் - விராட் கோலி

ரஜத் படிதார் – விராட் கோலி

பியூஷ் சாவ்லாவின் மோசமான சாதனை:

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பியூஷ் சாவ்லா. இந்தத் தொடரில் சிறப்பாக விக்கெட்டுகளை எடுத்து வந்தாலும், அதே அளவு ரன்களையும் வாரி வழங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை (185 சிக்ஸர்கள்) வழங்கிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஹால் (182 சிக்ஸர்கள்) உள்ளார். சி.எஸ்.கே அணியின் ஜடேஜா 180 சிக்ஸர்கள் கொடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.Source link