வானூர் : ஆரோவில் அறக்கட்டளை சார்பில், அரவிந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் கட்டுரை மற்றும் குறும்பட போட்டிக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி அறிக்கை:
ஆரோவிலில், அரவிந்தரின் 150வது பிறந்தநாள் மற்றும் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி மற்றும் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களும், கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஆரோவில் இந்தியாவின் மகத்துவத்தை ஆட்சி செய்தல்’ என்ற கருப்பொருளும், கல்லுாரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஸ்ரீ அரவிந்தோ மற்றும் ஆரோவில் மனித குலத்திற்கான இந்தியாவின் பரிசு’ என்ற கருப்பொருளிலும், தமிழ் மற்றும் ஆங்கில படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களின் தமிழ் கட்டுரை படைப்புகளை essay.schools.tamil@auroville.org.in மற்றும் ஆங்கில கட்டுரைகள் essay.schools.english@auroville.org.in, தமிழ் குறும்படங்களை film.schools.tamil@auroville.org.in மற்றும் ஆங்கில குறும் படங்கள். school.english@auroville.org.inஎன்ற மின்னஞ்சல்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதே போன்று, கல்லுாரி மாணவர்கள் தமிழ் கட்டுரை படைப்புகளுக்கு essay.college.tamil @auroville.org.inமற்றும் ஆங்கில கட்டுரை படைப்புகளை essay.college.english@auroville.org.in, தமிழ் குறும் படங்களை film.college.tamil@auroville.org.in மற்றும் ஆங்கிலத்தில் குறும் படங்களை film.college.english@auroville.org.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லுாரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
மாணவர்கள் படைப்புகளை வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு https;//aurovillefoundation.org.in மற்றும் www.aurobindo150shortfilm./com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்