விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் அமைந்துள்ளது குன்னூர் எனும் கிராமம். அந்த கிராமத்தின் எல்லையில் குத்துக்கல் முனீஸ்வரர் என்ற பெயர் பலகையோடு கோட்டை சுவருக்குள், மண்ணில் ஊன்றி வைக்கப்பட்ட பெரிய கல் இருப்பதை காணமுடியும். அந்த கல்லை தான் இப்பகுதி மக்கள் முனீஸ்வரர் என்று காலம் காலமாக வணங்கி வருகின்றனர்.

நீண்ட காலமாக இந்த குத்துக்கல், முனீஸ்வரராகவே இருந்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்கள் இப்பகுதியை ஆய்வு செய்த போது தான் இதுவெறும் கல் அல்ல 2500 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் என்று தெரியவந்தது.

குத்துக்கல்:

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்பது செங்குத்தாக வைக்கப்பட்ட பெரிய கல். ஒரு இனக்குழு தலைவன் அல்லது வீரன் இறந்த பின்னர் அவனை புதைத்து அதன் மேல் இந்த கல்லை நட்டு வைத்து செய்யப்படும் ஒரு ஈமச்சடங்கு. அதுவே காலப்போக்கில் முன்னோர் வழிபாடாக மாறி தற்போது தெய்வமாக மாறிவிட்டது. இது போன்ற குத்துக்கல் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் காணப்படுகிறது.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குத்துகற்களிலேயே மிகவும் பெரியது பிரான்சில் உள்ளது.

தமிழகத்தில் கரூர், திருப்பூர் போன்ற இடங்களில் இது போன்ற குத்துக்கல் காணப்படும் நிலையில், விருதுநகரை பொருத்தவரை இது தான் விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குத்துக்கல்லாக உள்ளது.இந்த குத்துக்கல் குன்னூர் பகுதியில் வாழ்ந்த ஒரு இனக்குழு தலைவனின் நினைவாக வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வரலாற்று பொக்கிஷம்:

இது பற்றி பேசிய கோவில் பூசாரி செல்லையா, தாங்கள் பரம்பரை பரம்பரையாக குத்துக்கல் முனீஸ்வருக்கு பூஜை செய்து வருவதாகவும், குழந்தை வரம் வேண்டி வருவோர், பில்லி சூனியம் நீக்க வருவோர் என நாடி வருவோரின் குறைகளை தீர்த்து வைப்பதால் அதிகளவில் மக்கள் வந்து செல்வதாக கூறினார்.

இது ஒரு வரலாற்று பொக்கிஷம் என கூறிய போது முதலில் அதை நம்பவில்லை ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் போர் போட தோண்டிய போது இரண்டு முதுமக்கள் தாழிகள் கிடைத்தது அப்போது தான் இது ஒரு பழம் பொக்கிஷம் என புரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

ALSO READ | காலையில் கல்லூரி, மாலையில் பாஸ்புட் கடை.. விருதுநகரை கலக்கும் கல்லூரி பேராசிரியர்..

என்னதான் வரலாற்று ஆதாரங்களை முன் வைத்தாலும், மக்கள் இதை நம்பிக்கையின் கண்ணோட்டத்தில் தான் பார்த்து வருகின்றனர். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் அதனால் தான் இன்று வரை 2500 ஆண்டு பழமையான இந்த முனீஸ்வரர் இன்னும் கம்பீரமாக நிற்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link