ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹேரி புரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்து வெளியேறினார். 26 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 21 ரன்னில் வெளியேற, கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கடந்த போட்டிகளில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ஹெய்ரிக் கிளாசன் 17 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மயங்க் அகர்வால் 2 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்சரா மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
தொடக்கத்தில் ஐதராபாத் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்குவிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: