தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான அம்மன் கோயில்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

பெரியம்மை, சின்னம்மை மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க அக்கினிசட்டி எடுத்தும், சேற்றாண்டி வேசமிட்டும், மஞ்சள் நீராடியும், ஆயிரம் கண் பானைகள் எடுத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபட்டு, சித்திரைத் திருவிழா நடத்துவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும் . ஏழு நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

அந்த வகையில் கம்பம் கௌமாரியம்மன் திருக்கோயிலின் இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. சாமி சாட்டும் நிகழ்வுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து காசி விசுவநாதர் கோயிலில் இருந்து அருள்மிகு கௌமாரியம்மன் உற்சவ மூர்த்தியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க : திடீரென தீப்பிடிக்கும் கரும்பு தோட்டம்.. புதுவை விவசாயிகள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டும் நிகழ்வில் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கம்பம் அழைத்து வரும் நிகழ்ச்சியும், கம்பம் கரகம் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கொடி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . பொதுமக்கள் கொடி மரத்தில் தீர்த்த நீரை ஊற்றி வழிபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை போன்ற மிகவும் புகழ்பெற்ற கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடும் நிகழ்ச்சியில், கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link