விருதுநகரை சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் மதுரை சாலையில் சிறிய சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். அதே நேரத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு ஆசிரியர் உணவுக்கடை நடத்தி வருகிறாரா என்று ஆச்சரியப்பட்டு அங்கு நேரில் சென்று பார்த்தபோது, ​​அத்தோ, பானிபூரி என பல வகையான சிற்றுண்டிகளை தயார் செய்து அசத்தி வருகிறார்.

இதுபற்றி பழனிக்குமார் பேசியபோது, ​​“பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து விட்டு சில காலம் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். பின்னர் இங்கு வந்து கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கினேன். எனக்கு சொந்தமாக ஒரு உணவகம் தொடங்க வேண்டும் என்ற ஆசையிருந்ததால் சிறிய முதலீட்டில் இந்த சிற்றுண்டி கடையை தொடங்கி 3 வருடங்கள் நடந்து வருகிறேன்.

ஒரு சிலர் ஒரு காலேஜ் வாத்தியார் இப்படி ரோட்டு கடை நடத்தி வருவது நல்லாவா இருக்கு? என கேட்டனர். அதெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா தொழிலும் நல்ல வேலை தான் என்ற அடிப்படையில் இதை விரும்பி வருகிறேன்” என புன்னகைக்கிறார் பழனிக்குமார்.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் மாணவர்கள் கூட சிலர் இவரின் முயற்சியால் கவரப்பட்டு அவர்களும் தங்களின் பகுதியில் சிற்றுண்டி கடை நடத்தி அதை வைத்து அவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். யார் என்ன சொன்னாலும் சரி தனக்கு அது பற்றிய கவலை இல்லை. காலையில் கல்லூரி சென்று மாலையில் வருவது ஓய்வில்லாத உழைப்பாக இருந்தாலும், ஒரு நாள் இதை பெரிய உணவாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓடி வருவதாகத் தெரிவிக்கிறார் பேராசிரியர் பழனிக்குமார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link