கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்க்க அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் ( Construction of Toilet facilities) மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities) போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாகவும்,15-20 வருடம் 200 வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து 4 லட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக மானிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாவட்ட ஆட்சியர் தலைமையினான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்” என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.