தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் பேணி காக்கும் பொருட்டு தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டன.

நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து, ஓய்வூதியம், குடும்பஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்து போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடந்த 19.06.2020 முதல் இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மேலும், நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்புமனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கு பணிச்சான்று, ஆதார் அட்டை, குடும்பஅட்டை, வங்கிகணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் போன்ற ஆவணங்களுடன் http://www.tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்கவும் | தென்காசியில் அதிகரிக்கும்.. முகக்கவசம் கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்து கொண்டவர்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாக பதிவை புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

எனவே, தென்காசி மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு நலவாரியங்களில் உறுப்பினராக பதிவுசெய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயனடையலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link