நாமக்கல், சேலம், ஈரோடுபெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயித்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மற்ற முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்ஐசிசி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)

கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நெஸ்பேக் 40 பைசா மைனஸ் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.80 மட்டுமே கிடைக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோழிவிளை : பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.105 ஆக பிசிசிஐ அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link