தமிழ்நாடு அரசு வனத்துறை திருநெல்வேலி கோட்டம் ஏட்ரி அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை இயற்கை அமைப்பு மற்றும் நெல்லை நீர்வளம் இணைந்து திருப்புடைமருதூர் அருகே ‘பொருநை நதி பார்க்கணுமே’ களப்பயணம் நிகழ்வானது.

இதுகுறித்து ஏட்ரி அமைப்பைச் சேர்ந்த மதிவாணன் கூறுகையில், “பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நீர் சுமார் 126 கிலோமீட்டர் பயணம் செய்து புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தாமிரபரணி நீர் தென் மாவட்ட மக்களின் உயிர் நாடி. தாமிரபரணி நீர் மக்களின் தாகத்தை மட்டும் தீர்க்காமல் பல்லுயிர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.

தாமிரபரணி நதிக்கரையின் ஓரங்களில் பழமையான கோயில்கள் உள்ளன அந்தக் கோயில்களில் நமது முன்னோர்கள் நந்தவனம் . அமைத்து மரங்கள் வளர்த்துள்ளனர் அதில் முக்கியமான கோயில் திருப்புடைமருதூர் நாறும்பூ நாதர் கோயில் உள்ளது. இங்கு அதிகமான பழமையான மரங்கள் உள்ளன.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

தாமிரபரணியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் உள்ள பல்லுயிர்களை பற்றி வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக, நதியின் கலாச்சாரம் பண்பாடு அதில் இருக்கக்கூடிய உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நிகழ்வுகள் பெயர்தான் பொருநை நதி பார்க்கணுமே.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தொடங்கி விட்டோம் .பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தாமிரபரணி ஆறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதன் ஒரு பகுதியாக திருப்புடை மருதூரில் இந்நிகழ்வு நடைபெற்றது” என தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link