திருச்சி மாவட்டம். மணப்பாறை என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது முறுக்குதான். பல மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மணப்பாறையை கடந்து செல்லும்போது முறுக்கு வாங்காமல் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இத்தகைய புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கு சுவைக்கு காரணம் அப்பகுதியின் உவப்பு கலந்த தண்ணீர் மற்றும் எல்,ஓமம் கடலை எண்ணெய் போன்ற மூலப் பொருள்தான். பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்கள் மணப்பாறை சென்றவுடன் முறுக்கு முறுக்கே என்ற வியாபாரிகளின் சத்தம் கேட்டவுடன் அனைவரும் நாவ்சுரக்கும் இந்த மணப்பாறை முறுக்கின் ருசியை வேறு எந்த முறுக்கினாலும் அடித்துக் கொள்ளவே முடியாது.

மணப்பாறை முறுக்கு தொழிலை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். தீபாவளி, பொங்கல் மாட்டுமின்றி பல விசேஷ நாட்களில் மணப்பாறை முறுக்குக்கு அதிக வரவேற்பு உள்ளது. வெளி நாடு, வெளி மாநிலங்களில் உள்ள சிலர் வந்து செல்கையில் கையில் முறுக்குடன்தான் செல்கின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இப்படி சுவையாலும், சிறப்பாலும் விளங்கும் மணப்பாறை முறுக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என கடந்த பல ஆண்டுக்கும் மேலாக இப்பகுதி முறுக்கு தயாரிப்பு, விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க | 10 ரூபாய்க்கு சுவையான மீன்குழம்பு சாப்பாடு ரெடி.. புதுச்சேரியில் ஃபேமஸ் ஆகும் ஹோட்டல்..

இதுகுறித்து பேசிய முறுக்கு தயாரிப்பு விற்பனையாளர், மணப்பாறை முறுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி முறுக்கு வியாபாரத்தை வெளி மாவட்டங்கள்,மாநிலங்களுக்கு கொண்டு செல்வோம், இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆகியோருக்கு முறுக்கு தயாரிப்பு, விற்பனையாளர் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். மேலும் முறுக்கு தொழில் மற்றும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link