கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்த வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன் தமிழரசன் மற்றும் 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலிசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சம்பவ இடத்தில் விழுப்புரம் சரக டிஜஜி பகலவன் ( பொறுப்பு ) நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார்.

உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் சரக டிஜஜி பகலவன் (பொறுப்பு), இந்த கொலை தொடர்பாக இரண்டு தடயங்கள் கிடைத்துள்ளது. மேலும் மிக விரைவில் இந்த கொலைக்கான காரணம் யார் என்பது குறித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடூரமாக மூன்று பேர் வீட்டிற்குள் கழுத்தறுக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மிக முக்கியமான வழக்காக இதை கருதுகிறோம். இரு தடயங்கள் கிடைத்துவிட்டது, இந்த கொடூர கொலை செய்த குற்றவாளியை கைது செய்வோம் என பேட்டியளித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link