பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.ராகவ் சதாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவதாக செய்தி வெளியானது. இருவரும் கடந்த மாதம் மும்பை ஹோட்டலுக்கு மதியம் மற்றும் இரவு விருந்துக்கு சேர்ந்து வந்த போதுதான் இருவருக்கும் இடையேயான காதல் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து பரினீதி சோப்ரா டெல்லிக்கு சென்றார். அவரை ராகவ் எம்.பி.நேரில் விமான நிலையம் வந்து அழைத்துச்சென்றார். இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க இருப்பதாக செய்தி வெளியாகிக்கொண்டே இருந்தது. ஆனால் திடீரென இருவருக்கும் இடையே ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இருவரும் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை உறுதிபடுத்தி உள்ளனர். இதில் இரு குடும்பத்து ஆட்கள் மட்டும் கலந்து கொண்டதாக பதிவு. அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் அவர் மும்பையில் உள்ள பிரபல பேஷன் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்திற்கு வந்துவிட்டு சென்றார். இதில் திருமணத்திற்கான ஆடைகள் குறித்து பேசிவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பு ஏற்கனவே இருக்கும் பணிகளை முடித்துவிட்டு திருமண ஏற்பாடுகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் ஜியோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இவ்விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியா வர உள்ளார். அப்படியே தனது சகோதரி பரினீதி சோப்ராவின் திருமணத்திலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் திருமண நிச்சயதார்த்தத்திலும் கலந்து கொண்டு சென்றார்.



Source link