நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர், மாணவிகளுக்கு எழுத்துத் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், காலை உணவுத் திட்டம், வாசிப்பு திறனை வளர்க்க தேன்சீட்டு எனும் அறிவியல் இதழ், நூலகத்திற்கென்று தனி நேரம், இதழ்களின் படைப்புகளிலிருந்து வினாடி வினா போட்டிகள், இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உட்பட இலக்கிய மன்ற செயல்பாடுகள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. .
மேலும், அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், ஆட்டக்கலைகள், இசை, நாடகம் ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் பள்ளியில் பயிற்சி, பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் திரைப்பட விழா, சிறார் இலக்கிய திருவிழா, விளையாட்டுப் போட்டிகள் வானவில் மன்றப் போட்டிகள். , வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெளிநாட்டு கல்விச் சுற்றுலா, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு தனிச் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் 3 பிரசார வாகனங்கள் 5 ஒன்றியத்திற்கு ஒரு வாகனம் வீதம் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாகனங்கள் மூலம் 19.04.2023 முதல் 28.04.2023 வரை விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் இந்த கல்வி ஆண்டில் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பாலசுப்பிரமணி, உதவி திட்ட அலுவலர் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: