திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள சிறுமலை வெள்ளிமலை கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்தக் வெள்ளிமலை கோவிலுக்குச் செல்ல சிறுமலை அகஸ்தியர் புறத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணம் செய்ய வேண்டும், இந்த அகஸ்தியர்புரத்தில் உள்ள சிவசக்தி சித்தர் பீடம் என்ற ஆசிரமத்திற்குச் செல்லும் முன்பு சென்ற பின்பும் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாசகங்கள் கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் படித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக எழுதி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளி மலையை நோக்கி பயணம் செய்யும் பக்தர்கள் மலைப்பாதையின் அழகை ரசித்துக்கொண்டு குடும்பத்துடன் செல்பி எடுத்து மூலிகை நறுமணத்தை சுவாசித்து, வெள்ளிமலை கோவிலில் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வருவார்கள்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதையும் படிங்க : 24 மணிநேர இலவச வைஃபை (Wi-Fi) வசதி.. புதுச்சேரியில் எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

இந்த வெள்ளிமலை சிவன் கோவில் வலதுபுறத்தில் சிறு சிறு கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், இதற்குக் காரணம் எத்தனை கற்கள் அடுக்கி வைக்கிறோமோ அத்தனை மாடி வீடுகள் கட்டுவதற்கு வேண்டிக் கொள்வதாக ஐதீகம் உள்ளது.

தீப கோபுரம்

இதனைத் தொடர்ந்து சிவன் கோயிலின் முன்புறம் விநாயகர் கோவிலில் முருகன் கோவிலில் சிறுமலையை நோக்கிப் பார்த்தவாறு அமைந்திருக்கிறது, இந்த தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு சிவன் கோவிலை நோக்கிச் செல்லும் பக்தர்கள் கோவிலில் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிவன் கோயிலின் பின்புறம் தீப கோபுரம் ஒன்று அமைந்துள்ளது, இந்த கோபுரத்தில் சிவராத்திரி அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போல் மகா தீபம் ஏற்றி வழிபடுவதாக கூறப்படுகிறது.

உடுக்கை அடி வழிபாடு

மேலும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கும் போது 200 மீட்டர் இறங்கியவுடன் இடது புறம் ஒரு பாறை அருகே சிறிய சிவலிங்கம் சூலாயுதத்துடன் அமைந்துள்ளது, இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது இங்கு வரும் பக்தர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அப்படியே தெரிந்தாலும் அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்வது மிகவும் ஆபத்தான தருணத்தை தரும். இருந்தாலும் ஒரு சிலர் அங்கு சென்று தொங்கும் பாறை மேல் அமைந்துள்ள சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து 1008 மந்திரங்கள் கூறி உடுக்கை அடித்து வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்….

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link