இயக்குநர் பாலாவை பற்றி தவறாக சொன்னேனா? – காயத்ரி கிருஷ்ணன் விளக்கம்
22 ஏப், 2023 – 13:52 IST

அயலி வலைதொடரின் மூலம் கவனம் ஈர்த்த காயத்ரி கிருஷ்ணன், சின்னத்திரையிலும் எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான காயத்ரிக்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளது. இடையிடையே ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அவ்வாறாக சமீபத்திய பேட்டி ஒன்றில் காயத்ரியிடம் ‘நிஜ வாழ்வில் குணசேகரன் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டதாகவும், அதற்கு இயக்குநர் பாலா குணசேகரனை விட மோசமான ஆள் என்றும் காயத்ரி சொன்னதாகவும் செய்தி வெளியானது. அதேசமயம் காயத்ரி கிருஷ்ணன் யூ-டியூப் சேனல்களுக்கு அளித்த பல பேட்டிகளில் அவர் இயக்குநர் பாலாவுடன் ஒரு படம் நடித்தால் கூட எந்த அளவுக்கு பாலாவை உயர்வாகப் பேசியிருந்தார். எனவே, இதுகுறித்து அவரிடமே கேட்டபோது, ’நான் பாலாவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். அதுமட்டுமே உண்மை. இயக்குநர் பாலாவை பற்றி நான் பேசியதாக பரவும் மற்ற செய்திகள் போலியானவையே’ என்று விளக்கமளித்துள்ளார்.
விளம்பரம்
வரவிருக்கும் படங்கள் !

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

- கள்ளபார்ட்
- நடிகர் : அரவிந்த் சாமி
- நடிகை : ரெஜினா
- இயக்குனர் :ராஜபாண்டி
ட்வீட்ஸ் @dinamalarcinema