சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12-ம் தேதி திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் எதார்த்த வாழ்வு இந்தப் படம் பிரதிபலிக்கிறது. ‘எந்தப் பறவையும் பறக்க மாட்டேன்னு கூட்டுல இருக்குறது இல்ல’ என்பது மாதிரியான பெண் சுதந்திரம் குறித்து அழுத்தமாக பேசும் வசனங்களும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளன. டீசர் வீடியோ லிங்க்..

Source link