தேனி மாவட்டம் கம்பம் பாரஸ்ட் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து, இறையச்சத்தோடு இரவு பகல் தொழுகையைக் கடைபிடித்து, ஷவ்வால் 1 அன்று ஈதூல் அஃகா என்னும் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும், இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

இதையும் படிங்க : ஈகை திருநாள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? – ஊட்டி இமாம் சொன்ன விளக்கம்..

புனித ரமலான் மாதம் நேற்றுடன் இப்தார் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று காலை தேனி மாவட்டம் கம்பம் பாரஸ்ட் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் கம்பம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ஈகை பெருநாள் தொழுகையில் ஈடுப்பட்டனர். கம்பம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ரமலான் நாளில் துவா செய்வது வழக்கம். இந்த தொழுகை கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் தலைமையில் துவா நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் அப்பகுதியை சேர்ந்த ஐந்தாயிராத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கதக் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் ஈத்கா மைதானத்திலிருந்து இஸ்லாமியர்கள் கம்பம் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கம்பம் வாவேர் பள்ளிவாசலில் ஒன்று கூடி துவாவில் ஈடுபட்டு ஏழை, எளியவர்களுக்கு உதவிகளை செய்து ரம்ஜான் பெருநாளை கொண்டாடினார்கள்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link