புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

கடகம்

புனர்பூசம் 4 முதல் பூசம் வரை உள்ள கடக ராசி அன்பர்களே..ஒரு குறைந்த அளவிலே நன்மைகள் செய்வார். உங்கள் உழைப்பு கூடும். மனம் தளர்ச்சி அடையும். இருப்பினும் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் மீண்டும் வருவீர்கள். புதிய தொழில் வேண்டாம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

சிம்மம்

மகம், பூசம், உத்திரம்-1, கொண்ட சிம்ம ராசி நேயர்களே, பல நன்மைகளை அடையக்கூடிய காலமாகும். உங்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வருமானம் உயரும். பதவியில் உயர்வு உண்டு, சிலருக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும், தொழில் விரிவடையும்.

இதையும் படிங்க : Guru Peyarchi 2023 | மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் – புதுக்கோட்டை ஜோதிடர் கணிப்பு!

கன்னி

உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 ஆகிய தேதிகளில் கன்னி ராசி அன்பர்களே, சற்று கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் உடல் நலத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கங்கள் இட பிரச்சனைகள் ஏற்படும் .குழந்தைகள் வாழ்வில் தாமதமான முன்னேற்றம் ஏற்படும். செலவுகளும் உண்டு வருமானமும் குறையும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link