ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 13 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதர்வா டைடே 29 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த லிவிங் ஸ்டோன் 10 ரன்கள் எடுத்தார். அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தபோது, கேப்டன் சாம் கரன் மற்றும் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்தனர். இருவரும் பொறுப்புடனும் அதிரடியாக விளையாடியும் ரன்களை சேர்த்தனர். 5 ஆவது விக்கெட்டிற்கு இருவரும் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்செய்த நிலையில், ஹர்ப்ரீத் சிங் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக அரைச் சதம் அடித்த சாம் கரன் 55 ரன்னில் வெளியேறினார், 7 பந்துகளை எதிர்கொண்ட விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் கேமரூன் கிரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேமரூன் கிரீன் – சூர்ய குமார் யாதவுடன் இணைந்து ரன்களை குவித்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் எடுத்தனர். கேமரூன் கிரீன் 67 ரன்னில் ஆட்டமிழக்க சூர்ய குமார் 57 ரன்னில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் டிம் டேவிட் சிங்கிள் எடுத்தார். 2 ஆவது பந்து டாட் பால் ஆன நிலையில் அடுத்த பந்தில் திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். 4 ஆவது பந்தில் இம்பேக்ட் ஆட்டக்காரராக களத்திற்கு வந்த நெஹல் வதேராவும் போல்டாகி ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் புதிதாக வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டபோது, 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்த மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்துவீசி 4 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: